பஞ்சாபி தால் மக்னி

பஞ்சாபி தால் மக்னி

தேவையானவை:

தோல் உள்ள உளுந்து - ஒரு கப்
சிவப்பு பீன்ஸ் - கால் கப்
பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய‌ தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 3 முதல் 4 கப்
ஃபிரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய்/எண்ணெய்/ நெய் - 3 டேபிள்ஸ்பூன்
பொடியாக‌ நறுக்கிய கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க

செய்முறை:

சுத்தம் செய்த உளுத்தம் பருப்பு, சிவப்பு பீன்ஸ் இரண்டையும் முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் 3 கப் நீர் சேர்த்து ஊறவைத்த உளுந்து, பீன்ஸை தண்ணீர் இறுத்து குக்கரில் உப்பு சேர்த்து, எட்டு முதல் 10 விசில் வரும் வரை (மசிக்கும் பதம் வரும் வரை) வேக விடுங்கள்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் வெண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, பெருங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் இதனுடன் அனைத்துத் தூள்களையும் சேர்த்துக் கலந்து உளுந்துக் கலவையையும் சேர்க்கவும்.

இறுதியாக ஃபிரெஷ் க்ரீமை சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.

இதனை ஜீரா புலாவ், நாண், ரைஸ், ரொட்டி பரோட்டவுடன் சேர்த்துப் பரிமாறலாம்.