அவித்த முட்டை சாதம்

குழந்தைகளுக்கு விருப்பமான அவித்த முட்டை சாதம்
அவித்த முட்டை சாதம்


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச பாக்சில் கொடுத்து அனுப்ப அவித்த முட்டை சாதம் சிறந்தது. இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - பாதியளவு
வேகவைத்த சாதம் - ஒன்றரை கப்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கொள்ளவும்.

அவித்த முட்டையில் பாதியைச் சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.

அடுத்து அதில் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

இதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

இப்போது வெட்டி வைத்திருக்கும் அவித்த முட்டையைச் சேர்த்து, மஞ்சள் கரு மசாலாவுடன் நன்றாகக் கலக்கும்வரை கிளறவும்.

வேகவைத்த சாதம் சேர்த்துக் கலந்து எடுக்கவும் (ஃப்ரைடு ரைஸ் செய்வது போல நன்றாகக் கிளறிவிட்டு எடுக்க வேண்டும்).

இறுதியில் இன்னும் கொஞ்சம் கொத்தமல்லித்தழை தூவிக் கிளறவும்.