Showing posts with label உடனடி உப்புமா. Show all posts
Showing posts with label உடனடி உப்புமா. Show all posts

உடனடி உப்புமா

உடனடி உப்புமா

தேவையானவை:

அரிசி மாவு 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, புளித்த மோர் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசிமாவுடன் மோர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். பிசைந்து வைத்த மாவில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து கடாயில் சேர்க்கவும். உதிரி உதிரியாக வரும்வரை நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: திடீர் விருந்தினர்களை சமாளிக்க இந்த உப்புமா உதவும்.