Showing posts with label பிரெட் ரசமலாய். Show all posts
Showing posts with label பிரெட் ரசமலாய். Show all posts

பிரெட் ரசமலாய்

பிரெட் ரசமலாய்

தேவையானவை:

பால் - 500 மில்லி
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய்- 3 (தூளாக்கிக் கொள்ளவும்)
பிரெட் ஸ்லைஸ் - 4
பாதாம், பிஸ்தா - சிறிதளவு
(நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து, பாலை ஊற்றி நன்கு காய்ச்சி, அடிப்பிடிக்காமல் அடிக்கடி கலக்கி விடவும். பால் பாதியளவு ஆனதும், அடுப்பை சிம்மில் வைத்து, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஆறு நிமிடம் வரை கொதிக்கவிட்டு பாதாம், பிஸ்தா தூவி இறக்கவும். இதைப் பரிமாறும் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும் போது, விரும்பிய வடிவில் பிரெட்டை நறுக்கி ஒரு பவுலில் வைத்து, அதன் மேல் குளிர்ந்த பாலை ஊற்றி, 2- 3 நிமிடம் ஊற வைத்து, சில்லென்று பரிமாறவும்