Showing posts with label மட்டன் பருப்புக் குழம்பு. Show all posts
Showing posts with label மட்டன் பருப்புக் குழம்பு. Show all posts

மட்டன் பருப்புக் குழம்பு

மட்டன் பருப்புக் குழம்பு

தேவையானவை:

சின்னவெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 30 கிராம்
எலும்பில்லாத ஆட்டுக்கறி (மட்டன்) - 200 கிராம்
இஞ்சி (விழுது) - 30 கிராம்
பூண்டு (விழுது) - 60 கிராம்
கரம்மசாலாத் தூள் - 20 கிராம் (பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மிளகு)
பச்சை மிளகாய் - 30 கிராம்
எண்ணெய் - 10 மில்லி.
நெய் - 100 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 25 கிராம்
மஞ்சள்தூள் - 10 கிராம்
பெருங்காயத்தூள் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரஷர் குக்கரில் ஆட்டுக்கறி (மட்டன்), உப்பு, இஞ்சி விழுது, பாதியளவு பூண்டு விழுது, பச்சைமிளகாய், வெங்காயம். தக்காளி எல்லாம் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பிறகு வேறொரு குக்கரில் பருப்புகள், மீதமுள்ள பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து வேகவைத்த ஆட்டுக்கறி, வேகவைத்த பருப்புகளைச் சேர்த்து எடுக்கவும். சிறிது பெருங்காயத்தூள், கரம்மசாலா தூவி அடுப்பை அணைக்கும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.