Showing posts with label மாங்காய் - பருப்பு குழம்பு. Show all posts
Showing posts with label மாங்காய் - பருப்பு குழம்பு. Show all posts

மாங்காய் - பருப்பு குழம்பு

மாங்காய் - பருப்பு குழம்பு

தேவையானவை:

மாங்காய் - ஒன்று, துவரம்பருப்பு - கால் கப், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு (பொடிக்கவும்), பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மாங்காயைத் தோல் சீவி, சிறுசிறு வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும். துவரம்பருப்பை குக்கரில் குழைய வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீர் விட்டு தனியே வேகவைக்கவும். வெந்த மாங்காயுடன் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து... உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், பெருங்காயம், காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து, கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். குழம்பு கெட்டியானவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.