Showing posts with label வல்லாரை கீரை சட்னி. Show all posts
Showing posts with label வல்லாரை கீரை சட்னி. Show all posts

வல்லாரை கீரை சட்னி

வல்லாரை கீரை சட்னி

தேவையான பொருட்கள்

வல்லாரை கீரை – அரை கட்டு
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
மிளகு – கால் டீஸ்பூன்
புளி – ஒரு கோலி குண்டு அளவு
வெல்லம் – சிறிதளவு
எண்ணெய் – தேவைகேற்ப
உப்பு – தேவைகேற்ப
கடுகு – சிறிதளவு
கறிவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை

கடாயில் சுத்தம் செய்து நறுக்கிய கீரை போட்டு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வருத்து கொள்ளவும்.

ஆறியதும் இரண்டு கலவையும் சேர்த்து உப்பு, புளி சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கவும்.