Showing posts with label ருசியான மீன் வறுவல். Show all posts
Showing posts with label ருசியான மீன் வறுவல். Show all posts

ருசியான மீன் வறுவல்

ருசியான மீன் வறுவல்

மீன் Red Mullet - 6
உள்ளி / வெள்ளைப்பூண்டு - 6
வெங்காயம் - 1
இஞ்சி விழுது - 1 மே.க
மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 தே.க
மிளகாய் தூள் - 1 1/2 மே.க
சீரகம் - 1 1/2 தே.க
எண்ணெய் - 3 மே.கா

முதல்ல மீனை எடுத்து சுத்தம் பண்ணிக்குங்க. மீனை இரண்டு பக்கமும் கீறிக்கொள்ளுங்கள்.Paper Towel இல் மீனை போட்டு வைக்கணும். ஏன் என்றால் மீனில் இருக்கும் நீர் தன்மை பேப்பரில் ஊறிப் போய்விடும்.

இப்போ வெங்காயம், உள்ளி, இஞ்சி, தூள்வகைகளுடன் உப்பை சேர்த்து நன்றாக அரைத்து எடுங்க. இதில நீர் சேர்க்க வேணாம்.

அரைத்த விழுதை எடுத்து மீனிற்கு இரண்டு பக்கமும் நன்றாக பூசி ஒரு மணி நேரம் ஊறவையுங்க.

எண்ணெயை சூடாக்கி முதலில் சீரகத்தையும், மிளகாயையும் ஒரு நிமிடத்திற்கு பொரியுங்க.பின்னர் அதிலேயே மீனை போட்டு இரண்டு பக்கமும் பொரித்து எடுங்கள்.எலுமிச்சங்காயை துண்டுகளாக்கி பரிமாறுங்க.

மிகவும் ருசியான, இலகுவாக தயாரிக்க கூடிய உணவு. சமைத்து சாப்பிடுங்க.