Showing posts with label கடப்பா. Show all posts
Showing posts with label கடப்பா. Show all posts

கடப்பா

கடப்பா

தேவையானவை:

பயத்தம்பருப்பு - 100 கிராம், கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 4 பல், காய்ந்த பட்டாணி - 25 கிராம் (ஊற வைக்க வும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கசகசா, பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்த பொடி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக் கொள்ள:

தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு.

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

பயத்தம்பருப்பைக் கழுவி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு... நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து, ஊற வைத்த பட்டாணியும் சேர்த்து குழைந்து விடாமல் வேகவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கி, வெந்த பருப்புக் கலவையை சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்த பிறகு அரைத்து வைத்த விழுது, வறுத்துப் பொடித்த மசாலா பொடி சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

இது, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.