Showing posts with label வெண்டைக்காய் சூப். Show all posts
Showing posts with label வெண்டைக்காய் சூப். Show all posts

வெண்டைக்காய் சூப்

வெண்டைக்காய் சூப்...!!!

தேவையானவை:

வெண்டைக்காய் - 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.
தேவைப்பட்டால் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்க்கலாம் (நன்கு சூடாக இருக்கும்போதுதான் முட்டையைச் சேர்க்க வேண்டும்).

வெண்டைக்காய் சூப்

வெண்டைக்காய் சூப்

தேவையானவை:

வெண்டைக்காய் – 5 (பொடியாக நறுக்கவும்), தக்காளி, பெரிய வெங்காயம் – தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, காராபூந்தி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு நீர் – 2 கப் (பருப்பை வேகவைத்து வடித்த நீர்), சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வெண்டைக்காயை நறுக்கி, வெறும் கடாயில் வதக்கவும் (காயில் உள்ள வழவழப்பு நீங்கும்). வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி, வெண்டைக்காயை சேர்க்கவும். இத னுடன் பருப்பு நீர், மஞ்சள்தூள் சேர்த்து, கொதி வந்ததும் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, எலு மிச்சைச் சாறு சேர்க்கவும். பரிமாறும் போது மல்லித்தழை தூவவும். மேலும் சுவைகூட்ட, சூப்பை கப்பில் ஊற்றும்போது மேலே காராபூந்தி தூவலாம்.