Showing posts with label காட்டேஜ் சீஸ் சாலட். Show all posts
Showing posts with label காட்டேஜ் சீஸ் சாலட். Show all posts

காட்டேஜ் சீஸ் சாலட்

காட்டேஜ் சீஸ் சாலட்

தேவையானவை:

பனீர் (காட்டேஜ் சீஸ்) - 250 கிராம்
கேரட் - 100 கிராம்
பூண்டு - 2 பல்
லெட்யூஸ் இலை - 150 கிராம்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - அரை டீஸ்பூன்
வால்நட் - 4 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்)
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், ஊறவைத்த பனீர் மற்றும் தோல் நீக்கிய முழுப்பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். பிறகு, அகலமான பவுலில் பொரித்தெடுத்தவற்றுடன் தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.