Showing posts with label பச்சை இறால் வறுவல். Show all posts
Showing posts with label பச்சை இறால் வறுவல். Show all posts

பச்சை இறால் வறுவல்

பச்சை இறால் வறுவல்

என்னென்ன தேவை?

இறால்- 500கிராம்
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-3
இஞ்சி- 1துண்டு
பூண்டு-5 பல்
முட்டை-1
சோளமாவு- 1ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள்- 1ஸ்பூன்

எப்படி செய்வது?

கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி இறாலை லைட்டாக அதாவது ஒரு வேக்காடு வேகவைக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டிவிடவும். வடிகட்டிய இறாலை மிகவும் சிறியதாக பொடிபொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும். காரத்திற்கு கரம் மசாலா அரை ஸ்பூன், சாட் மசாலா அரை ஸ்பூன், கருப்பு மிளகு அரை ஸ்பூன் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். அதில் பிரெட் தூள் 2ஸ்பூன், காலிப்ளவர் மாவு, தேவையான அளவு உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக வடை செய்கிற மாதிரி செய்து நடுவில் முந்திரி பருப்பு வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி 3-5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் சுவையான பச்சை அறால் வறுவல் தயார்.