Showing posts with label பால் கொழுக்கட்டை. Show all posts
Showing posts with label பால் கொழுக்கட்டை. Show all posts

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை

தேவையானவை:

பச்சரிசி மாவு - அரை கப், பால் - 4 கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, தண்ணீர் - ஒரு கப்.

செய்முறை:

ஒரு வாணலியில் தண்ணீர், உப்பு, எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது பச்சரிசி மாவைப் போட்டுக் கிளறவும். கெட்டியானவுடன் அடுப்பை அணைத்துவிடவும். ஆறியதும் மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பாத்திரத்தில் பாலை விட்டு அடுப்பில் வைக்கவும். கொதிக்கும்போது உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளைப் போடவும். வெந்தவுடன் அந்த உருண்டைகள் மேல் எழும்பி வரும். இப்போது சர்க்கரையைப் போடவும். சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.