பன்னீர் பாயாசம்
தேவையானவை:
பன்னீர் - 100 கிராம்
பால் - 500 மில்லி லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய் - 8 (பொடித்தது)
முந்திரி - இரண்டு டேபிள்ஸ்பூன்
திராட்சை - இரண்டு டேபிள்ஸ்பூன்
நெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
பேரிச்சம்பழம் - 30 கிராம்
பிஸ்தா - 2
பாதாம் பருப்பு - 3
செய்முறை:
பன்னீர், பேரிச்சம்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய் சேர்த்து, முந்திரி, திராட்சையை அதில் சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சி, அதில் நறுக்கிய பன்னீர், பேரிச்சம்பழம், ஏலக்காய் மற்றும் சர்க்கரையை சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சவும். பிறகு அதில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட்டு இறக்கவும். சூடான பாயாசத்தில் பாதாம் பருப்பு, பிஸ்தாவை பொடியாக நறுக்கி அதனை தூவிவிட்டுப் பரிமாறலாம்.
குறிப்பு: பன்னீர் பாயாசத்தை ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.