கூட்டு வடகக் குழம்பு

கூட்டு வடகக் குழம்பு


தேவையானவை:

கூட்டு வடகம் - 15, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - ஒரு சிறிய எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்த யம், கடலைப்பருப்பு தாளித்து... கூட்டு வடகத்தைப் போட்டு வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்