ஸ்பைஸி கார்ன் சூப்

ஸ்பைஸி கார்ன் சூப்


தேவையானவை:

வெள்ளை சோள முத்து – கால் கப், (10 மணி நேரம் ஊறவைக்கவும்), பெரிய வெங்காயம் – ஒன்று, முட்டைகோஸ் – கால் கப் (நீளமாக துருவியது), சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன், பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, வெண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

வெள்ளை சோள முத்தை 10 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய வெள்ளை சோள முத்து, நறுக்கிய முட்டை கோஸ் உடன் நீர் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் நீரை வடிகட்டி… காய்கறி, தண்ணீரை தனித்தனியாக வைக்கவும். கடாயில் வெண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பூண்டு விழுது, உப்பு, சில்லி சாஸ் சேர்த்து மேலும் வதக்கி, காய்கறி வேகவைத்த நீரை ஊற்றி ஒரு கொதி விடவும். பிறகு, வடிகட்டி வைத்த கோஸ், சோளத்தை சேர்த்துக் கிளறி, 2 நிமிடங்களுக்குப் பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.