புளி இல்லாத ரசம்

புளி இல்லாத ரசம்

தேவையானவை:

தக்காளி சாறு – 2 கப், வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் – அரை கப், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (நீள வாக்கில் கீறியது) – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

உளுத்தம்பருப்பையும், மிளகையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். தக்காளி சாறு, பருப்புத் தண்ணீர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அரைத்த பொடியையும் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீறிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கீழே இறக்கி, எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.