கறிவேப்பிலை ரசம்

கறிவேப்பிலை ரசம்

தேவையானவை:

கறிவேப்பிலை – ஒரு கப், துவரம்பருப்பு – 3 டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், புளி – ஒரு சிறிய உருண்டை,

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், நெய் – சிறிதளவு, கடுகு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.