பு‌தினா சாத‌ம்

பு‌தினா சாத‌ம்


தேவையானவை:

பாசுமதி அரிசி - 2கப்
புதினா - 1கப்
இஞ்சி, பூண்டு - ‌சி‌றிது
பச்சை மிளகாய் - 3 நீளவாக்கில் நறுக்கியது
கறிவேப்பிலை
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/2கப் நீளவாக்கில் நறுக்கியது
சின்ன வெங்காயம் - 1கப் நீளவாக்கில் நறுக்கியது
பட்டை, லவங்கம், ஏலக்காய் - 3
தேங்காய் பால் - 1கப்
தண்ணீர் - 1/2கப்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2ஸ்பூன்
பாசுமதி அரிசியை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:

வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம், புதினா, இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நன்கு வதக்கி மிக்ஸியில் மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.

பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு வதக்கவும்.

அதனுடன் ஊறிய அரிசி, அரைத்த கலவை, தேவையான அளவு உப்பு, தேங்காய் பால், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 1 விசில் 5 நிமிடம் வந்தவுடன் அணைத்து விடவும். ‌

பு‌தினா சாத‌ம் தயார்