பாகற்காய் பிட்லை

பாகற்காய் பிட்லை

தேவையானவை:

பாகற்காய் - 2, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், துவரம்பருப்பு - 100 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி போட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் வேகவைத்த பாகற்காயை சேர்த்து, அரைத்து வைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். பிறகு, வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயத்தை தாளித்து சேர்த்து இறக்கவும்.