உளுத்தங்கஞ்சி
தேவையானவை:
முழு உளுந்து – ஒரு கப், நாட்டுச் சர்க்கரை அல்லது துருவிய வெல்லம் – கால் கப் , ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மாதுளை முத்துக்கள் – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ச்சி, ஆறவைத்த பால் – 2 கப்.
செய்முறை:
முழு உளுந்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதனுடன் நீர் சேர்த்து, குக்கரில் வேகவைத்து எடுத்து, நன்றாக மசித்துக்கொள்ளவும். பாலில் நாட்டு சர்க்கரை (அ) துருவிய வெல்லத்தைக் கரைத்து, மசித்த உளுந்தையும் போட்டு, அடுப்பில் வைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). இறக்கும்போது தேங்காய்த் துருவல், மாதுளை முத்துக்கள் தூவி இறக்கிப் பரிமாறவும்.