மோர் ரசம்

மோர் ரசம்


தேவையானவை:

மோர் – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், வெந்தயம், கடுகு – தலா அரை டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

துவரம்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகு ஆகியவற்றை வறுத்து, சீரகத்தை சேர்த்து அரைக்கவும். மோரில் மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து லேசாக சூடு செய்து (கொதிக்க வைக்க வேண்டாம்) கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.