புதினா ரசம்

புதினா ரசம்


தேவையானவை:

புதினா இலைகள் – ஒரு கப், மிள காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி சாறு (அ) புளித் தண்ணீர் – 2 கப், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

புதினா இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும் இந்த நீரில் உப்பு, மிளகாய்தூள், சீரகத்தூள் பெருங்காயத் தூள், தக்காளி சாறு அல்லது புளி தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.