கலப்படத்தை கண்டுபிடிக்கும் வழிகள்...

கலப்படத்தை கண்டுபிடிக்கும் வழிகள்...


ஒரு தட்டை சாய்வாக வைத்து அதில் அரை தேக்கரண்டி பால் விட்டால், சுத்தமான பால் லேசாக நகரும் அல்லது அப்படியே நிற்கும். கலப்படப்பால் எனில் வேகமாக ஓடிவிடும்.

தேயிலையை ஈரமான டிஷ்யூ பேப்பரில் சிறிதளவு தூவினால் செயற்கை நிறம் தானாகப் பிரிந்து விடும்.

சர்க்கரையை ஒரு கண்ணாடி டம்ளர் நீரில் கரைத்தால் அதில் கலந்துள்ள சாக்கட்டித்தூள், ரவை இரண்டும் மேலே மிதக்கும், சர்க்கரை அடியில் தங்கும்.

மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்களையும் கண்ணாடித் தம்ளர் நீரில் கரைத்தால் வண்ணம் நீரில் விரிந்து இளஞ்சிவப்பாக மாறும்.

ஜவ்வரிசியை 10 நிமிடம் நீரில் ஊற வைத்துப் பின்முகர்ந்து பார்த்தால் ப்ளீச்சிங் வாசனை வரும்.

தானியங்களை உப்பு நீரில் போட்டால் காளான் விதைகள் மிதக்கும். தானியங்கள் அடியில் தங்கும்.

வெல்லம் மேல் பகுதியில் வெள்ளை வெள்ளையாக மாவுபோல் தோன்றுவதோடு இளம் மஞ்சள் நிற வெல்லம் ரசாயனத்தால் ப்ளீச் செய்யப்பட்டதாக இருக்கும்.

கலப்பட கோதுமை மாவு சற்று வெண்மை நிறமாகவும், அதிக நீர் விட்டுப் பிசையும் படியும், சப்பாத்தி சுவையற்று இறுக்கமாகவும் இருக்கும்.

சுத்தமான தேனைக் கண்டுப்டிக்க, தேனை சுத்தமான பருத்தித் துணியில் நனைத்து தீக்குச்சியைப் பற்ற வைத்து அதில் காட்டினால் தீப்பிடித்து நன்றாக எரியும். கலப்படம் என்றால் தீப்பட்டதும் உடனே கருகிவிடும்.