நெய் சோறு

நெய் சோறு

தேவையானவை:

அரிசி- 200 கிராம்
தேங்காய்- அரை மூடி
( தேங்காயின் பிரவுன் நிறத் தோலை நீக்கிவிட்டு பால் எடுக்கவும்்)
நெய்- 50 கிராம்
முந்திரிப்பருப்பு, திராட்சை (கிஸ்மிஸ்) - 10 கிராம்
ரம்ப இலை -1
இஞ்சி - பூண்டு விழுது- 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்- சிறிதளவு
பட்டை, லவங்கம், ஏலக்காய்- 2
தயிர்- ஒரு டீஸ்பூன்

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்து சூடானதும், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்து, வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் இஞ்சி - பூண்டு விழுது, ரம்ப இலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தயிர் சேர்த்து கிளறவும்். ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் எடுத்து, தேங்காய்ப்பால் சேர்த்து கலவையில் ஊற்றி வேக விடவும். இதில் அரிசி, உப்பு சேர்த்து அரிசி வெந்ததும் முந்திரி கிஸ்மிஸ் தூவி தம் கட்டவும்.