மட்டன் எலும்புச்சாறு

மட்டன் எலும்புச்சாறு

தேவையானவை:

ஆட்டுக்கறி (மட்டன்) எலும்புகள் - 200 கிராம்
அரிசி களைந்த தண்ணீர் - 1 லிட்டர்
சீரகம் - 20 கிராம்
தக்காளி - 55 கிராம்
கொத்தமல்லித்தழைத் தண்டு (அரைத்துக்கெள்ளவும்) - 30 கிராம்
பூண்டு - 10 பல் (அரைக்கவும்)
நல்லெண்ணெய் - 20 மில்லி
மிளகுத்தூள் - 20 கிராம்
சின்னவெங்காயம் - 30 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 20 கிராம்
பெருங்காயத்தூள் - 2 கிராம்.
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எலும்புத் துண்டுகளை பிரஷர் குக்கரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து 10 விசில் வரும்வரை நன்றாக வேகவைக்கவும். வெந்தபின் எலும்பு மற்றும் வேகவைத்த தண்ணீரைத் தனித்தனியே பிரித்து வைக்கவும். பாதியளவு நல்லெண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி, கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது, சீரகம், நறுக்கிய தக்காளி, எலும்புத்துண்டுகள், அரைத்து வைத்த கொத்தமல்லித்தண்டு, மிளகுத்தூள், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும். இப்போது மீதி உள்ள நல்லெண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இத்துடன் வடிகட்டிய எலும்புச்சாறு, ஏற்கெனவே வதக்கி வைத்திருக்கும் கலவை சேர்த்து வதக்கவும். இதில் பெருங்காயத்தூள் தூவி கிளறி, கடைசியாக உப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.