மாங்காய் ரசம்

மாங்காய் ரசம்

தேவையானவை:

மாங்காய் துருவல் – அரை கப், துவரம்பருப்பு, மிளகு – தலா 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, தக்காளி சாறு – கால் கப், கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆறியபிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தக்காளி சாறு, உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.