பயறு கஞ்சி

பயறு கஞ்சி


தேவையானவை:

முழு பச்சைப் பயறு – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, பூண்டுப் பல் – 5, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, வெந்தயம் – ஒரு டீஸ்பூன் (15 நிமிடம் ஊறவைக்கவும்) இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

பச்சைப்பயறை அலசி, 6 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டுப் பல், ஊறவைத்த வெந்தயம், இஞ்சி விழுது கலந்து, உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். பின்னர் இறக்கிவைத்து, சூட்டுடன் பெருங்காயத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.