பத்திய ரசம்

பத்திய ரசம்

தேவையானவை:

புளி – நெல்லிக்காய் அளவு, மிளகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

புளியை நேரடியாக அடுப்பு தணலில் காட்டி திருப்பி, திருப்பி சுட்டு அதை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, பிழிந்து, புளிக்கரைசல் தயார் செய்யவும். மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து பொடித்துக்கொள்ளவும். கடாயில் புளிக்கரைசல் விட்டு… உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகு – சீரகப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.